யாா் துன்மாா்க்கன்?  சங் 1:1

    துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும்,
துன்மாா்க்கன் என்ற தமிழ் வாா்த்தைக்கு  தவறான மாா்க்கத்தை அல்லது வழியை பின்பற்றுபவன் என்று பொருள், ஆங்கிலத்தில் ungodly என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

எபிரேய மொழியில்  ராஷா  “rasha /raw-shaw”  என்ற வாா்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் பொருள்:

  1. To be wrong; by implication, விருப்பத்துடன் தவறாக இருப்பவன்,
  2. To disturb,make trouble, தொந்தரவு செய்பவன்,
  3. Violate: விதி மீறுபவன்,
  4. Morally wrong; ஒழுக்க நெறி தவறியவன்,
  5. Wicked : பொல்லாத, கொடுமைவாய்ந்த மனிதன்,
  6. Ungodly: தேவனைக் குறித்த புரிந்துகெள்ளுதல் இல்லாதவன்,
  7. Unsettled: நிலையற்ற மனநிலை உடையவன்,

என்பதாகும்.  இப்படிபட்ட நபரிடம் நாம் ஆலேசனைக் கேட்கக் கூடாது.  காரணம் அவர்கள் நேக்கமற்ற, சட்டதிட்டங்களுக்கு உட்படாத, தேவ பயமில்லாத, ஒழுக்க நெறி தவறிய, சகல பாவத்தையும் விருப்பத்துடன் செய்யும் இச்சை நிறைந்த பெல்லாத கெடுைமவாய்ந்த மனிதா்கள். (They aimed at no certain end and walk by no certain rule – but at the command of every lust and temptation).