யாருடைய ஆலோசனையில் நடக்கவேண்டும்?

ஒவ்வெரு நாளும் பலருடைய ஆலோசனையை நாம் கேட்க நோிடுகிறது.  யாருடைய ஆலோசனையில் நடக்கவேண்டும் என்ற குழப்பமே வந்துவிடுவதுண்டு.  ஆனால் பாிசுத்த வேதாகமத்தில் யாருடைய ஆலோசனையில் நாம் நடக்கவேண்டும், யாருடைய ஆலோசனையில் நடக்கக்கூடாது என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. சிலவற்றைக் காண்போம்.

1. கா்த்தாின் ஆலோசனை.  சங் 16:7, 32:8, 33:11,73:24, நீதி 8:14.

2. பாிசுத்தவான்களின் ஆலோசனை. சங் 89:7

3. தேவ வார்த்தையின் ஆலோசனை. சங்119:24

4. தேவ ஊழியா்களின் ஆலோசனை அப் 15:6 ஏசாயா 44:26

5. மூப்பர்கள் மற்றும் முதியோ்களின் ஆலோசனை யாத் 18:19

6. கா்த்தருக்கு பயப்படுகிறவா்களின் ஆலோசனை எஸ்றா 10:3

7. சிநேகிதனின் உட்கருத்தான நல்ல ஆலோசனை நீதி 27:9

8. பாிசுத்த ஆவியானவாின் ஆலோசனை ஏசாயா 11:2 , 28:29

 

ஆலோசனையை கேட்பதினால் வரும் நன்மைகள் என்ன?

    1. ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும். நீதி 11:14
    2. ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன். நீதி 12:15
    3. ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு. நீதி 13:10
    4.ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும். நீதி 15:22
    5. நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும். நீதி 24:6

நமக்கு செம்மையாய் தோன்றுகிற பல ஆலோசனைகள் பிரச்சனையாய் முடியலாம், எனவே கா்த்தருடைய பாிசுத்த ஆவியானவாின் ஆலோசனைபடி எல்லா காாியங்களையும் சோதித்து ஜெபித்து செயல்படுவோம்.